சபொரோயே அணு மின் நிலையம்-உக்ரைன் தேசிய மின் வலைப்பின்னல் இணைப்பு துண்டிப்பு
2022-08-26 17:17:21

உக்ரைன் தேசிய அணு மின் தொழில் நிறுவனம் 25ம் நாள் வெளியிட்ட தகவலின்படி, சபொரோயே அணு மின் நிலையத்துக்கு அருகிலுள்ள ஒரு அனல் மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், தேசிய மின் தொகுதியுடனான இணைப்பு, முதன்முறையாக முழுமையாகத் துண்டிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, 1.37 இலட்சம் வீரர்கள் ராணுவத்தில் சேர்ப்பது தொடர்பான உத்தரவில், ரஷிய அரசுத் தலைவர் புதின் 25ஆம் நாள் கையொப்பமிட்டார். இதனைத் தொடர்ந்து ரஷிய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை, 11.5 இலட்சமாக உயர்ந்துள்ளது.