உலகத்துடன் முன்பில்லாத ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியுள்ள சீனா
2022-08-26 17:12:32

உலக வங்கி வெளியிட்ட வருடாந்தர வணிக சூழல் பற்றிய அறிக்கையின் படி, சீனாவின் வணிகச் சூழலில் உலகளாவிய தரவரிசை 2015ஆம் ஆண்டில் 90ஆவது இடத்திலிருந்து 2020ஆம் ஆண்டில் 31வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.

இன்றைய சீனா உலகத்துடன் முன்னென்றும் கண்டிராத ஒருங்கிணைப்பைக் கொண்டுள்ளது. சரக்கு வர்த்தகத் தொகை, கடந்த 10 ஆண்டுகளில் இருந்ததை விட, 14 இலட்சத்து 70 ஆயிரம் கோடி யுவான் அதிகரித்தது. சர்வதேச சந்தையில் சீனாவின் பங்கு 13.5 விழுக்காடாக அதிகரித்துள்ளது. உலக விநியோகச் சங்கிலியில் சீனா மேலும் வலுவடைந்துள்ளது. சராசரியாக, ஒவ்வொரு நிமிடமும் 7 கோடியே 34 இலட்சத்து 90 ஆயிரம் யுவான் மதிப்பிலான பொருட்கள் சீனாவுக்கும் பன்னாடுகளுக்கும் இடையில் ஏற்றிச்செல்லப்படுகின்றன.