பாகிஸ்தான் பொருளாதாரம் எதிர்கொள்ளும் உயர் பணவீக்கம்
2022-08-26 17:23:12

பாகிஸ்தானில் உயர் பணவீக்கம் மற்றும் பொருள்களின் விலையேற்றத்தால் நிலவும் வெளிப்புற அழுத்தம் ஆகியவற்றைப் பொருளாதாரம் எதிர்கொண்டுள்ளது என்று அந்நாட்டு நிதித் துறை தெரிவித்துள்ளது.

இந்த அழுத்தத்தை எதிர்கொள்ளும் விதம் அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாகவும், இதனால் வளர்ச்சிப் போக்கு நிலைநிறுத்தப்படும் என்றும் அந்நாட்டின் மாதாந்திரப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைக்காலத்தில் பெய்த பலத்த மழை, அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இவ்வாண்டு பயிர் உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

தவிரவும், புவி-அரசியல் பதற்றம், உலக அளவிலான பணவீக்க உயர்வு, வட்டி விகித உயர்வு ஆகியன குறித்தும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.