சீனத் தேசிய வேளாண் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப புதுப்பிப்பு பணிக் கூட்டம்
2022-08-26 15:13:57

சீனத் தேசிய வேளாண் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப புதுப்பிப்பு பணிக் கூட்டம், 25ஆம் நாள் ஜியாங் சூ மாநிலத்தின் நன் ஜிங் நகரில் நடைபெற்றது. வேளாண் துறையின் நவீனமயமாக்கத்துக்கு அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் அடிப்படை ஆற்றலாகும் என்று சீன தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் இதற்கு வழங்கிய அறிவுரையில் குறிப்பிட்டார். மேலும்,  புதிய யுகத்தில் சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிசம் பற்றிய ஷி ச்சின்பிங்கின் சிந்தனையை வழிக்காட்டலாகக் கொண்டு, வேளாண் துறையில் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப புதுப்பிப்பையும் பயன்பாட்டையும் முன்னேற்றி, தொழில் நிறுவனங்கள் மற்றும் திறமைசாலிகளின் புத்தாக்க ஆற்றலை ஊக்குவிக்க வேண்டும். வேளாண் துறை அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் பணியாளர்கள், இத்துறையின் நவீனமயமாக்கத்தை விரைவுப்படுத்தி, தானிய பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பதற்கும், கிராமப்புற மறுமலர்ச்சியை முன்னேற்றுவதற்கும் தொடர்ந்து பங்காற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.