சீனாவில் 6 தாராள வர்த்தக மண்டலங்களின் சோதனைகள்
2022-08-26 15:08:47

ஷாங்காய் தாராள வர்த்தக சோதனை மண்டலத்தின் லின்காங் புதிய பகுதி, ஷான்டோங், ஜியாங்சூ, குவாங்சி, ஹேபெய், யுன்னான், ஹெய்லோங்ஜியாங் ஆகியவற்றிலுள்ள 6 தாராள வர்த்தகச் சோதனை மண்டலங்களும் 2019ஆம் ஆண்டு ஆகஸ்டில் நிறுவப்பட்டு, 3 ஆண்டுகள் இயங்கியுள்ளன. சீன வணிக அமைச்சகம் 25ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் செய்தித் தொடர்பாளர் ஷு யுடிங் இது பற்றி அறிமுகம் செய்த போது, தற்போது இந்த 7 மண்டலங்களுக்கான 713 சோதனைப் பணிகள் நடைமுறைக்கு வந்துள்ளன என்றும், குவாங்சி, யுன்னான், ஹெய்லோங்ஜியாங் ஆகிய எல்லைப் பகுதிகளில் முதன்முறை அமைக்கப்பட்ட தாராள வர்த்தகச் சோதனை மண்டலங்கள், எல்லை கடந்த ஒத்துழைப்புக்கான முயற்சிகளை மேற்கொண்டு, எல்லைப் பகுதியின் திறப்பு நிலையை உயர்த்தி வருகின்றன என்றும் தெரிவித்தார்.