தடுப்பூசி ஒழுங்குமுறையில் சீனாவின தகுநிலை உயர்வு
2022-08-26 17:22:37

சீனத் தடுப்பூசி ஒழுங்குமுறை அமைப்பு, முதிர்ச்சியான செயல்பாட்டில் மூன்றாம் தகுநிலையை எட்டியதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இது, தடுப்பூசி ஒழுங்குமுறையில் நிலைத்தன்மை மற்றும் சிறப்பான செயல்பாட்டைச் சீனா  கொண்டுள்ளதைக் காட்டுகிறது. அத்துடன், தடுப்பூசியின் தரம், பாதுகாப்பு மற்றும் திறன் ஆகியவற்றை உறுதிசெய்யும் ஒருங்கிணைந்த ஒழுங்குமுறை அமைப்பைக் கொண்டுள்ளதையும் சுட்டிக் காட்டுகிறது.

உலக சுகாதார அமைப்பின் வரையறைப்படி, முதிர்ச்சித் தன்மையைக் காட்டுவதற்கு நான்கு நிலைகள் வகுக்கப்பட்டுள்ளது. அவற்றில் சீனா மூன்றாவது தகுநிலையை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.