அமெரிக்காவின் தவறான நடவடிக்கைக்கு சீனா எதிர்ப்பு
2022-08-26 10:26:23

அமெரிக்க வணிக அமைச்சகம் தனது ஏற்றுமதி கட்டுப்பாட்டுப் பட்டியலில் 7 சீன நிறுவனங்களை சேர்த்தது குறித்து, சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷு யுடிங் 25ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பதிலளித்த போது எதிர்ப்பு தெரிவித்தார். இத்தவறான நடவடிக்கையை அமெரிக்கா உடனே நிறுத்த வேண்டும் என்றும், சீன நிறுவனங்களின் சட்டப்பூர்வ உரிமை நலன்களைப் பேணிக்காக்க, சீனா அவசிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.