வட்டி தொடர்ந்து உயர்த்தப்படும் : அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி தலைவர்
2022-08-27 19:59:06

அமெரிக்காவில் பணவீக்கத்தை வலிமையாகக் கட்டுப்படுத்தும் வகையில், தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அடுத்த சில மாதங்களில் பெருமளவில் வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கு சாத்தியம் உள்ளது என்று அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல், ஜாக்சன் ஹோல் ஆண்டுக் கூட்டத்தில்  தெரிவித்தார்.

அதேவேளையில், வட்டி உயர்வு, அமெரிக்க குடும்பங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சில வலியை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.

பணவீக்கத்தை 2 விழுக்காடாக குறைப்பது  பெடரல் ரிசர்வ் வங்கியின் முக்கிய இலக்கு ஆகும். ஆனால், இந்த இலக்கை அடையும் வகையில் வட்டி விகிதத்தை உயர்த்துவது அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். வட்டி விகித உயர்வு, பொருளாதார வளர்ச்சி மெதுவாக இருப்பது உள்ளிட்டவை பணவீக்கத்தை தணிக்கும். இதன் விளைவாக, குடும்பங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சில சிரமங்கள் ஏற்படும். இந்த விளைவு, பணவீக்கத்தைக் குறைப்பதற்கு கொடுக்கும் விலையாகும் என்று ஜெரோம் பவல் சுட்டிக்காட்டினார்.

மேலும், ஜெரோம் பவல் நிகழ்த்திய இந்த உரையால், நியூயார்க் பங்கு சந்கையில் மூன்று முக்கிய குறியீடுகள் வெள்ளிக்கிழமை பெரிய சரிவைச் சந்தித்தது.