அமெரிக்க கண்டத்தில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகம்
2022-08-27 15:48:47

உலகச் சுகாதார அமைப்பு ஆகஸ்டு 25ஆம் நாள் தெரிவிக்கையில், ஐரோப்பாவைத் தாண்டி, தற்போது அமெரிக்க கண்டத்தில் குரங்கு அம்மையால் புதிதாகப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மிக அதிகம் என்றது. மேலும், கடந்த 24ஆம் நாள் வெளியிடப்பட்ட தகவலின்படி, ஆரம்பகாலங்களில், குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள். ஆனால், கடந்த 4 வாரங்களில், அமெரிக்க கண்டத்தில் குரங்கு அம்மையால் புதிதாகப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உலகின் 60.3 விழுக்காடு வகித்துள்ளது. ஐரோப்பாவில் இந்த விகிதம் 38.7 விழுக்காடாக குறைந்துள்ளது.

ஆகஸ்டு 22ஆம் நாள் வரை, அமெரிக்கா, ஸ்பெயின், பிரேசில், ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, நெதர்லாந்து, பெரு, போர்ச்சுக்கல் ஆகிய 10 நாடுகளில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மிக அதிகம். இந்த 10 நாடுகளில் மொத்த எண்ணிக்கை மொத்த பாதிப்பில் 88.9 விழுக்காடு வகித்துள்ளது.