சீனாவில் கடும் வெப்பம் முன்னெச்சரிக்கை வெளியீடு
2022-08-28 16:41:11

சீனாவின் சிச்சுவான், சொங்சிங், குய்ஜோ, ஹூபெய், ஹூநான், ஜியாங்சி உள்ளிட்ட இடங்களில் 28ஆம் நாள் 35முதல் 39டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டது. அவற்றில் சிச்சுவானின் கிழக்கு பகுதி, சொங்சிங்கின் நடுப்பகுதி மற்றும் மேற்குப் பகுதி, ஹூநானின் நடுப்பகுதி உள்ளிட்ட இடங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டும் என்று சீன மத்திய வானிலை நிலையம் தெரிவித்ததுடன், கடும் வெப்பம் தொடர்பான மஞ்சள் எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.