உலகின் வறுமை ஒழிப்பில் சீனா பங்களிப்பு
2022-08-28 19:25:14

உலக வறுமை ஒழிப்புப் பணியில் சீனாவின் பங்களிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ருவாண்டா நாட்டின் கமோனி நகரில் 2012ஆம் ஆண்டு முதல், சீனாவின் விவசாய தொழில்நுட்ப பணியாளர்கள் ஜூன்சாவ் தாவரச் சாகுபடிக்காக 5000க்கும் மேற்பட்ட திறமைசாலிகள் மற்றும் விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்தனர். தற்போது, உலகின் நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் ஜூன்சாவ் சாகுபடி, வறுமை ஒழிப்புக்குப் பங்காற்றி வருகிறது. சீனா கோடிக்கணக்கான மக்களை வறுமையிலிருந்து விடுவித்த அதோவேளையில், வறுமை ஒழிப்புக்கான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டும் வருகிறது.

இதனிடையில், மொசாம்பிக் தலைநகர் மாபுடோவில்  கடல் பாலம் சீனாவுடனான ஒத்துழைப்பு மூலம் கட்டியமைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியுடன், பயண நேரம் 2மணி நேரத்தில் இருந்து வெறும் 10 நிமிடமாக குறைந்துள்ளது. அர்ஜென்டீனாவின் வடக்குப்பகுதியில் கடல்மட்டத்திலிருந்து 4000மீட்டர் உயரமான கௌச்சாரி பீடபூமியில் சூரிய ஒளி மின் நிலையம் சீனாவின் உதவியில் அமைக்கப்பட்டது. இது சுமார் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு மின் விநியோகம் வழங்குகிறது.

உலக வங்கி வெளியிட்ட ஓர் அறிக்கையின் படி, 2030ஆம் ஆண்டு வரை ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்னெடுப்பு, இதில் கலந்து கொள்ளும் நாடுகளின் வர்த்தகத்தை 2.8முதல் 9.7விழுக்காடு வரை அதிகரிக்க செய்யும். உலகின் வர்த்தகம், 1.7முதல் 6.2விழுக்காடு வரை அதிகரிக்கப்படும். 76லட்சம் மக்களும் தீவிர வறுமையிலிருந்து 3கோடியே 20லட்சம் மக்களும் மிதமான வறுமையிலிருந்து விடுவிக்கப்படுவர்.