கன மழையால் பாகிஸ்தானில் 1033பேர் உயிரிழப்பு
2022-08-28 16:43:57

பாகிஸ்தானில் ஜூன் மாதத்தின் நடுப்பகுதி முதல் கன மழைக்கு 1033பேர் உயிரிழந்தனர். 1527பேர் காயமடைந்தனர் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் 27ஆம் நாள் தெரிவித்தது.

மேலும், கன மழையின் பாதிப்பில் சுமார் 9லட்சத்து 50ஆயிரம் வீடுகள் முழுமையாகவும் பகுதியாகவும் சேதமடைந்தன.  சுமார் 7லட்சத்து 20ஆயிரம் கால்நடைகள் உயிரிந்தன. 149பாலங்கள் மற்றும் 3450கிலோமீட்டர் நீளமான சாலைகள் சீர்குலைந்தன. 5 இருப்புப்பாதைகள் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டன என்று இவ்வாணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.