கலிஃபோர்னிய சுற்றுலா துறை:உயர் வெப்பநிலையால் பாதிப்பு
2022-08-28 18:27:16

அமெரிக்காவின் கலிஃபோர்னிய மாநிலத்தின் சுற்றுலா துறையின் ஆண்டுக்கு வருமானம் பொதுவாக 14500 கோடி அமெரிக்க டாலர். ஆனால், இவ்வாண்டு உயர் வெப்பநிலை மற்றும் வறட்சி காரணமாக, பயணிகள் மிகக் குறைவு.

கலிஃபோர்னியா அமெரிக்காவின் மேற்குப் பகுதியிலும், பசிபிக் பெருங் கடலின் கிழக்கு கரையிலும் அமைந்துள்ளது. புகழ்பெற்ற கடல் பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் தேசிய நிலை பூங்காக்கள் ஆகியவை ஆண்டுதோறும் உலக நாடுகளின் பயணிகளை ஈர்க்கின்றன. ஆனால், இவ்வாண்டு இம்மாநிலத்தின் சில இடங்களில் தீவிர வெப்பநிலை, சுற்றுலா துறையைக் கடுமையாகப் பாதித்துள்ளது.