10லட்சம் டன் உணவு தானியங்களை ஏற்றுமதி செய்துள்ள உக்ரைன்
2022-08-29 17:08:42

கருங்கடல் தானிய முன்முயற்சி அமலுக்கு வந்தது முதல், 10லட்சம் டன் தானியங்கள், உக்ரைனின் மூன்று துறைமுகங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன என்று உக்ரைன் அரசுத் தலைவர் ஜெலன்ஸ்கி 26ஆம் நாள் தெரிவித்தார்.

இதனிடையில்,  உக்ரைனின் தானியங்கள் 44 சரக்குக் கப்பல்களுடன் 15 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. தற்போது இன்னும் 70க்கும் அதிகமான கப்பல்கள் தானியங்களை கொண்டுச் செல்லும் வகையில் உக்ரைனின் துறைகளுக்கு வருவதற்கு விண்ணப்பித்துள்ளன. ஒவ்வொரு திங்களுக்கும் கடல் போக்குவரத்து மூலம் 30லட்சம் டன் தானியங்களை ஏற்றுமதி செய்ய உக்ரைன் இலக்கிட்டுள்ளது.

உலகளாவிய தானிய பாதுகாப்பை உறுதி செய்ய, ரஷியாவின் தானியங்கள் மற்றும் உரப்பொருட்களின் ஏற்றுமதி குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பல்வேறு தரப்புகள் செயல்படுத்த வேண்டும் என்று ரஷிய வெளியுறவு அமைச்சகம் அதே நாள் வேண்டுகோள் விடுத்துள்ளது.