இந்தியா மின்சார வாகனங்களின் மையமாக மாறும்:மோடி
2022-08-29 11:25:17

இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உள்பட மின்சார வாகனங்களின் மையமாக இந்தியா மாறி வருகின்றது என்று இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். குஜராத் மாநிலத்தில் பயணம் மேற்கொண்டு இந்தியாவிலுள்ள சுசுகியின் 40ஆவது ஆண்டு நினைவுக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற போது அவர் கூறுகையில், மின்சார வாகனங்கள் சத்தம் எழுப்பாமல் நாட்டில் அமைதி புரட்சியை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன” என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வுடன் குஜராத்தில் ஒரு மின்சார வாகனங்களின் மின்கலத் தயாரிப்பு ஆலையும் ஹரியானாவில் சுசுகியின் புதிய உற்பத்தி நிறுவனமும் தொடக்கப்பட்டன.

தற்போது இந்திய மக்கள் மின்சார வாகனங்களை முக்கிய போக்குவரத்து வசதியாக ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று மோடி தெரிவித்தார்.

மின்சார வாகனத் தயாரிப்புத் துறையில் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவிலும் குஜராத் முன்னணி இடமாக மாறியுள்ளது என்றும் அவர் கூறினார்.