சீனப் பொருளாதாரத்தின் நிலைத்தன்மைக்குக் காரணம்
2022-08-29 10:36:54

2020 முதல் 2022ஆம் ஆண்டின் முற்பாதி வரை, கண்டிப்பான நோய் தடுப்பு நடவடிக்கையுடன், சீனப் பொருளாதாரத்தின் மொத்த இழப்பு விகிதம் 2.3 விழுக்காடாக மட்டுமே இருந்தது. இதனிடையே, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளின் ஓரளவு இறுக்கமான நோய் தடுப்பு முறையில் இவ்விகிதம் 3.9 விழுக்காட்டையும், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளின் எதிர்மறை நோய் தடுப்பு முறையில் இவ்விகிதம் 5.9 விழுக்காட்டையும் எட்டியது.

சீனாவின் நோய் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கையே தொழில் சங்கிலி மற்றும் வினியோகச் சங்கிலியை நிதானப்படுத்தியதன் விளைவாக, சீனத் தயாரிப்பு, உலகளாவிய நோய் தொற்று தடுப்பு, உற்பத்தி மற்றும் வாழ்வாதாரத்துக்கான ஆதாரத்தூணாகத் திகழ்ந்து வருகிறது.

இவ்வாண்டின் முற்பாதியில், உலகளவில் முக்கிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி சரிவடையும் எனக் கணிக்கப்பட்ட நிலையில், சீனாவின் ஏற்றுமதி தரவு, பொருளாதார வளர்ச்சியில் கவனிக்கத்தக்க அம்சமாக மாறியுள்ளது. மேலும், சீனத் தேசிய நுகர்வோர் விலை குறியீடு, 1.7 விழுக்காடு உயர்வுடன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.