ஜாபோரோஷியே அணுமின் நிலையத்துக்குச் சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் நிபுணர் குழுவினர்
2022-08-29 15:28:44

சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் நிபுணர் குழு ஜாபோரோஷியே அணுமின் நிலையத்துக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது என்று அந்த நிறுவனத்தின் தலைமை இயக்குநர் கிராஸ்ஸி 29ஆம் நாள் தெரிவித்தார்.

ஐரோப்பாவின் மிகப்பெரிய இந்த அணுசக்தி நிலையத்தின் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

உக்ரேனின் ஜாபோரோஷியே மாநிலத்தின் இராணுவ மற்றும் சிவில் அரசின் பொறுப்பாளர் பாலிட்ஸ்கி RIA நோவோஸ்டிக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் நிபுணர் குழுவினருக்கு விரிவான பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்க மாநில அரசு தயாராக உள்ளது. உண்மையான நிலைமையை மதிப்பிடுவதற்கு, அணுமின் நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குள் நிபுணர்கள் நுழைவது உறுதி செய்யப்படும் என்றார் அவர்.