சின்ஜியாங் தொடர்பான அமெரிக்காவின் பொய் தகவலுக்கு சீனா எதிர்ப்பு
2022-08-29 17:38:39

அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் தொடர்புடைய நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், சீனா சின்ஜியாங் பற்றிய கருத்தைக் கட்டுப்படுத்துவதாக அவதூறு செய்துள்ளது.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஜாவ் லிஜியான் 29ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில்,

சீனாவிற்கு பொய் தகவல்களால் தீங்கு  விளைவிக்கப்பட்டுள்ளது. சின்ஜியாங்கில் ‘கட்டாய உழைப்பு’  உள்ளிட்ட பொய்களை அமெரிக்கா தான் தொடர்ந்து உருவாக்கி பரப்பி வருகிறது என்று சுட்டிக்காட்டினார்.

தற்போது, பாதுகாப்பு மற்றும் நிலைப்புதன்மை வாய்ந்த சமூக சூழலைக் கொண்ட சின்ஜியாங் சீராக  வளர்ந்துள்ளது. உள்ளூர் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இது, சின்ஜியாங் தொடர்பாக அமெரிக்காவின் பொய் தகவல்களுக்கு நல்ல மற்றும் வலுவான பதிலடியாகும் என்றார் ஜாவ் லிஜியான்.