ஈரான் அணு ஆற்றல் ஒப்பந்தத்தை மீட்டெடுப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்
2022-08-29 10:29:38

ஈரான் அணு ஆற்றல் ஒப்பந்தத்தைப் பன்முகங்களிலும் மீட்டெடுப்பது பற்றிய பேச்சுவார்த்தையில் பெரும்பாலான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டன என்று ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கனானி 28ஆம் நாள் தெரிவித்துள்ளார்.

எஞ்சிய பிரச்சினைகள் உணர்ச்சிமிக்கதாகவும் முக்கியமானதாகவும் தீர்க்கமானதாகவும் உள்ளன. இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கும் விதம் ஈரான் தரப்பு வழங்கிய ஆலோசனைகளுக்கான அமெரிக்காவின் மறுமொழி பற்றி ஈரானின் நிபுணர்கள் பரிசீலனை செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். நிபுணர்கள் கூட்டம் நிறைவடைந்தவுடனே அமெரிக்காவுக்குப் பதில் அளிக்கும் என்று அவர் தெரிவித்தார்.