ஆப்பிரிக்காவுக்குத் தேவைப்படுவது உண்மையான ஒத்துழைப்புத்தானே தவிர போட்டியும் எதிர்ப்பும் அல்ல
2022-08-30 09:43:32

ஆப்பிரிக்க வளர்ச்சிக்கான 8ஆவது  டோக்கியோ சர்வதேச மாநாடு அண்மையில் டுனிசியாவில் நடைபெற்றது. இதில் ஜப்பான் வரும் 3 ஆண்டுகளில் ஆப்பிரிக்காவில் 3000 கோடி அமெரிக்க டாலர் முதலீடு செய்து, 3 லட்சம் திறமைசாலிகளைப் பயிற்றுவிக்கத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் தலைமை அமைச்சர்  ஃபுமியோ கிஷிடா அறிவித்தார். இதனிடையில் இத்திட்டம் சீனாவின் செயல்பாடுகளிலிருந்து வேறுபடுகின்றது என்று அவர் சிறப்பாக விவரித்தார். சீனாவுக்கு எதிராகச் செயல்படும் விதம், ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவை ஃபுமியோ கிஷிடா வலுப்படுத்துகின்றார் என்று ஜப்பானில் மிகப் பெரிய பத்திரிகையான அசாகி நியூஸ் 28ஆம் நாள் வெளியிட்ட செய்தியில் கூறியது.

கடந்த சில ஆண்டுகளாக ஆப்பிரிக்காவுக்கான உதவியை அதிகரிக்க வேண்டும் என்று ஜப்பான் தெரிவித்து வருகின்றது. ஆப்பிரிக்காவில் தனது நிலைகளை அமைப்பது, சீனாவுக்கு எதிராகச் செயல்படுவது, பணம் மூலம் ஐ.நாவில் நிரந்தர உறுப்பு நாடு என்ற தகுநிலையை வாங்குவது ஆகியவை ஜப்பானின் நோக்கமாகும் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர்.