அக்டோபர் 16ஆம் நாள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாடு
2022-08-30 19:31:37

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது மத்திய கமிட்டியின் 7ஆவது முழு அமர்வுக் கூட்டம்,  வரும் அக்டோபர் 9ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாடு அக்டோபர் 16ஆம் நாள் நடைபெறத் தொடங்கும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு, 7ஆவது முழு அமர்வுக் கூட்டத்திடம் முன்மொழியவுள்ளது.

 சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது மத்திய கமிட்டியின் 7ஆவது முழு அமர்வு மற்றும் 20ஆவது தேசிய மாநாட்டின் ஆயத்தப் பணிகள் குறித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு ஆகஸ்ட் 30ஆம் நாள் நடத்திய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.