ஈராக்கில் ஏற்பட்ட மோதலில் 12 பேர் பலி
2022-08-30 10:37:35

ஈராக்கி்ன் தலைநகரான பாக்தாத்தின் "பசுமை மண்டலத்தில்" ஆகஸ்டு 29ஆம் நாள் நடைபெற்ற ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர், பத்துக்கும் மேற்பட்ட பேர் காயமடைந்தனர் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறினார்.

இதனிடையே நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 29ஆம் நாள் இரவு 7 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதாக அந்நாட்டுக் கூட்டு நடவடிக்கை தலைமையகம் தெரிவித்தது.

அன்று முன்னதாக, ஷிஐட் பிரிவின் தலைவர் சதர் சமூக ஊடகத்தில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

அதற்குப் பிறகு ஒரு மாதமாக நீடித்திருந்த ஊர்வலத்தில் தீவிர மோதல் நிகழ்ந்தது.