பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு – உயிரிழந்தவர்களுக்கு மோடி இரங்கல்
2022-08-30 10:22:25

பாகிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களுக்கு இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி இரங்கள் தெரிவித்தார்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கும், காயமடைந்தவர்களுக்கும் ஆறுதல் தெரிவிக்கிறோம். பாகிஸ்தானில் விரைவில் இயல்புநிலை திரும்பும் என்று நம்புவதாக அவர் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

ஊடகத் தகவல் படி, அந்நாட்டில்  வெள்ளப்பாதிப்பால் சுமார் 1,100 பேர் உயிரிழந்தனர். 3.3 கோடி பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.