பாரிஸ் ஒலிம்பிக் நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் CMGக்குப் பாஹ் வாழ்த்து
2022-08-31 16:13:40

சீன ஊடகக் குழுமம் 2024ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனமாவதற்குச் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாஹ் 30ஆம் நாள் வாழ்த்து தெரிவித்தார். சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநர் ஷென் காய்சியோங்கிற்கான கடிதத்தில் பாஹ் கூறுகையில், வரும் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் சமிக்ஞை தயாரிப்பில் சீன ஊடகக் குழுமம் ஒலிம்பிக் ஒலிபரப்புச் சேவை நிறுவனத்துடன் தொடர்ந்து ஒத்துழைக்கவுள்ளதைக் கேட்டறிந்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இம்மாபெரும் சாதனை பெறுவதற்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். ஒலிம்பிக் போட்டி வெற்றிகரமாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டு உலகளாவிய நிலையில் மேலதிக மக்களுக்கிடையே பரவல் செய்யப்படுவதற்குச் சீன ஊடக குழுமத்தின் உயர் தர ஒளிப்பரப்பு மற்றும் செயல்திறன் பெரிதும் பங்காற்றியுள்ளது என்று பாஹ் கூறினார்.

இறகு பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், பாறை ஏறுதல் மற்றும் மேசை பந்து ஆகிய 4 போட்டிகளின் சமிக்ஞை தயாரிப்புக்குச் சீன ஊடகக் குழுமம் பொறுபேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.