சீனாவின் உதவிகளுக்குப் பாகிஸ்தான் தலைமையமைச்சர்
2022-08-31 14:16:16

பாகிஸ்தான் தலைமையமைச்சர் முகம்மது ஷபாஸ் ஷெரீப் 30ஆம் நாள் இஸ்லாமாபாத்திலுள்ள தலைமையமைச்சர் மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், வெள்ள நிவாரணம் மற்றும் பேரிடர் நிவாரணத்திற்கான சீனாவின் உதவி செய்த மனித நேய உதவிகளுக்குப் பாகிஸ்தான் நன்றி தெரிவிக்கின்றது என்றார்.

மீட்பு மற்றும் பேரிடர் நிவாரணம் தற்போது மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கியப் பணியாகும். பேரிடருக்கு பிந்தைய புனரமைப்பு மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்குக் குறைந்தது 1000 கோடி அமெரிக்க டாலர் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்குச் சர்வதேச சமூகம் தொடர்ந்து உதவிகளை வழங்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

ஜூன் நடுப்பகுதியில் இருந்து, பாகிஸ்தானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பல்வேறு பேரழிவுகளில் 1,136 பேர் உயிரிழந்தனர். 3 கோடியே 30 இலட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் 30ஆம் நாள் தெரிவித்தது.