அமெரிக்காவில் முறைப்படுத்தப்பட்ட இனப்பாகுபாடு:ஐ.நா அறிக்கை
2022-08-31 14:56:23

கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் வெறுப்புக் குற்றம் மற்றும் வெறுப்புப் பேச்சு நிகழ்வுகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. வெவ்வேறு இனங்களுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் உயிர் இழப்புகள் பெரிதும் அதிகரித்துள்ளன என்று அண்மையில் வெளியிடப்பட்ட ஓர் ஐ.நா அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.

அமெரிக்கா அனைத்து வடிவத்திலான இனப்பாகுபாடுகளையும் ஒழிப்பது தொடர்பான பன்னாட்டு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் நிலைமையை ஐ.நாவின் இனப்பாகுபாடு ஒழிப்பு ஆணையம் பரிசீலனை செய்து,  30ஆம் நாள் இறுதி அறிக்கையை வெளியிட்டுள்ளது. மருத்துவச் சிகிச்சை, கல்வி, உறைவிடம் முதலிய துறைகளில் அமெரிக்காவிலுள்ள  வெள்ளைநிறம் அல்லாதவர்கள் மற்றும் சிறுபான்மை இனத்தவர்கள் முறைப்படுத்தப்பட்ட இனப்பாகுபாட்டை எதிர்நோக்கி வருகின்றனர் என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.