சீனாவில் 105கோடிக்கும் மேலான இணையப் பயனர்கள்
2022-08-31 16:21:36

2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை, சீனாவில் இணையப் பயனர்களின் எண்ணிக்கை 105 கோடியே 10லட்சத்தை எட்டியுள்ளது. நாடளவில் இணைய இணைப்பு கிடைக்கும் விகிதம் 74.4 விழுக்காடு ஆகும். மேலும் சீனாவின் கிராமப்புறத்தில் இணைய உள்கட்டமைப்பின் கட்டுமானம் பன்முகங்களிலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. கிராமப்புறத்தின் இணைய இணைப்பு விகிதம் 58.8விழுக்காட்டை எட்டியுள்ளது என்று சீன இணைய வலைப்பின்னல் தகவல் மையம் 31ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.