இவ்வாண்டின் பிற்பாதியில் செயலாக்க நிதிக் கொள்கை:சீனா
2022-08-31 10:32:25

2022ஆம் ஆண்டு முதல் பாதியில் சீன நிதிக் கொள்கை நடைமுறையாக்கம் பற்றிய அறிக்கையை சீன நிதி அமைச்சகம் 30ஆம் நாள் வெளியிட்டது.

இதில் நோய் தொற்று பரவல் உள்ளிட்ட காரணிகளின் தாக்கம் இருந்தாலும், சீனாவில் வரவுச் செலவுத் திட்டம் பொதுவாகச் சீராக செயல்பட்டு வருகின்றது என்று தெரிவிக்கப்பட்டது.

இவ்வாண்டின் பிற்பாதியில் ஒருங்கிணைக்கப்பட்ட பல்வகை வரிக் கொள்களைகளின் மூலம் சந்தையில் ஏற்படும் இன்னல்களைச் சமாளித்து பொருளாதார வளர்ச்சிக்கு நிதி அமைச்சகம் தொடர்ந்து ஆதரவளிக்கும். மேலும், பயன் தரும் முதலீட்டை விரிவாக்கி, வேலை வாய்ப்புகளை அதிகரித்து, நுகர்வை ஊக்குவிக்கும் வகையில் நிதிக் கொள்கைகளையும் நாணயக் கொள்கைகளையும் நிதி அமைச்சகம் இசைவாக நடைமுறைப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.