கடலில் காற்றாலை உற்பத்தித் திறன் 6 மடங்கு உயர்த்த 8 ஐரோப்பிய நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் அறிவிப்பு
2022-08-31 19:25:12

8 ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் ஐரோப்பிய ஆணையத் தலைவரும் 30ஆம் நாள் டென்மார்க் தலைமை அமைச்சரின் இல்லமான மரியன்போர்க்கில் பால்டிக் கடல் எரியாற்றல் பாதுகாப்பு உச்சிமாநாட்டை நடத்தி மரியன்போர்க் அறிவிப்பில் கையொப்பமிட்டனர். இவ்வறிவிப்பில் எரியாற்றல் பாதுகாப்பு மற்றும் கடலில் காற்றாலை மின்சார உற்பத்தி ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு ஒப்புக்கொள்வதோடு, 2030ஆம் ஆண்டு அவற்றின் கட்டுப்பாட்டிலுள்ள பால்டிக் கடல் பரப்பில் காற்றாலை உற்பத்தித் திறனை தற்போதைய 2.8ஜிகாவாட்களிலிருந்து 19.6 ஜிகாவாட்களுக்கு உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, எரியாற்றல் துறையின் ஒத்துழைப்பை வலுப்படுத்தி ரஷியாவின் எரிபொருள் மீதான சார்பளவைக் படிப்படியாக குறைக்க முடியும் என்று சில ஐரோப்பிய நாடுகள் விரும்புகின்றன.