பாகிஸ்தானுக்குச் சீனா உதவி செய்த மனித நேய பொருட்கள்
2022-08-31 14:15:12

வெள்ள நிவாரணம் மற்றும் பேரிடர் நிவாரணத்திற்காகப் பாகிஸ்தானுக்கு, சீனா அளித்த மனித நேய பொருட்களுடன் சீன விமானப்படையின் Y-20 போக்குவரத்து விமானம், கராச்சி நகரை 30ஆம் நாள் அடைந்தது.

கராச்சி நகரிலுள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் நடந்த ஒப்படைப்பு விழாவில் பாகிஸ்தானுக்கான சீனத் தூதர் நோங் ரோங் கூறுகையில், சீனாவும் பாகிஸ்தானும் பரஸ்பர உதவி செய்து, இன்னல்களைக் கூட்டாக எதிர்கொண்டு வருகின்றன. இந்த உதவிக்குப் பிறகு, பாகிஸ்தானுக்குச் சீனா தொடர்ந்து உதவி செய்யும் என்றார்.

பாகிஸ்தான் அரசின் சார்பாக, பாகிஸ்தானின் மின்சாரத் துறை அமைச்சர் குர்ரம் தஸ்தகிர் கான் இந்த விழாவில் கூறுகையில், பாகிஸ்தானுக்கு உதவி செய்த முதலாவது நாடு சீனா ஆகும். இரு நாட்டு மக்களின் தலைமுறை நட்புறவை இது முழுமையாகக் காட்டுகின்றது என்றார்.