ஐஎம்எஃப்புடன் இலங்கை விரைவில் ஒப்பந்தம்
2022-09-01 09:51:53

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் சிறந்த முன்னேற்றங்கள் கிடைத்துள்ளன என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன், முதல் மைல் கல்லாக, ஊழியர்-நிலை ஒப்பந்தம் ஒன்று விரைவில் எட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த ஒப்பந்தம், முக்கியமான கொள்கை சீர்திருத்தங்களுடன் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும். நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்தி புத்துயிர் ஊட்டுவதற்கு அத்தகைய சீர்திருத்தங்கள் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கை,  பொருளாதார மீட்சிக்கு அடிப்படையாகும். நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் போக்கில் மக்கள் வலிகளை எதிர்கொள்ள வேண்டும். இருப்பினும், நேர்மறையான முடிவுகள் கிடைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.