கீழை-2022 பயிற்சி
2022-09-01 10:16:43

"கீழை-2022" பயிற்சி ஆகஸ்ட் 31ஆம் நாள் காலை ரஷியாவின் உசுரிஸ்க் நகரிலுள்ள செர்ஜியேவ்ஸ்கி பயிற்சி மைதானத்தில் துவங்கியது. சீனா, அல்ஜீரியா, இந்தியா, பெலாரஸ், தாஜிக்ஸ்தான், மங்கோலியா முதலிய நாடுகளின் ராணுவத்தினர், இப்பயிற்சியில் பங்கேற்றனர்.

சீனாவின் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப் படையைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பயிற்சியில் பங்கேற்றுள்ளனர்.

இப்பயிற்சி, செப்டம்பர் 7ஆம் நாள் வரை நடைபெறும். மொத்தம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் இப்பயிற்சியில் பங்கேற்றுள்ளனர்.