ரஷிய எண்ணெய் விலை உச்சவரம்பை அமைக்க 7 நாடுகள் குழு விவாதம்
2022-09-01 16:35:15

ரஷியாவின் எண்ணெய் விலை உச்சவரம்பை அமைப்பதென்ற அமெரிக்க அரசுத் தலைவர் ஜோன் பைடனின் முன்மொழிவு குறித்து செப்டம்பர் 2ஆம் நாள் 7 நாடுகள் குழுவின் நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. ரஷியாவின் எண்ணெய் விலை உயர்வைக் கட்டுப்படுத்தி உலக எரிசக்தி விலையைக் குறைப்பது அதன் நோக்கமாகும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியரை ஆகஸ்ட் 31ஆம் நாள் தெரிவித்தார்.