உலகளவில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரிப்பு
2022-09-01 16:16:37

உலகச் சுகாதார அமைப்பு ஆகஸ்டு 31ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இதுவரை உலகளவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50496 ஐ எட்டியது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆகும். அமெரிக்கா, ஸ்பெயின், பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், பெரு, கனடா, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1000த்தை தாண்டியுள்ளது.

மேலும், கடந்த 7 நாட்களில் உலகளவில் புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5139 ஆகும்.

உலகச் சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ரோஸ் ஆகஸ்டு 31ஆம் நாள் கூறுகையில், சில நாடுகளில் புதிதாகப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்நோய் கட்டுப்படுத்தப்படும் என்பதை இது வெளிப்படுத்தியுள்ளது என்றார்.