இந்தியாவில் முதல் காலாண்டு ஜிடிபி அதிகரிப்பு
2022-09-01 09:51:12

இந்தியாவில் நடப்பு நிதியாண்டின் முதலாம் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 13.5 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாம் காலாண்டில் வேளாண்துறையிலான வளர்ச்சி 4.5 விழுக்காடு பதிவாகியுள்ளது. இது 2021இல் 2.2 விழுக்காடாக இருந்தது. அதேபோல், உற்பத்தித் துறையும் 4.8 விழுக்காட்டை எட்டி சிறிது வளர்ச்சியைக் காட்டியுள்ளது.

தரவுகளின்படி, முதலாம் நிதி காலாண்டு ஜிடிபியின் மொத்த அளவு 46 ஆயிரத்து 300 கோடி டாலர். இது கடந்த ஆண்டில் 40 ஆயிரத்து 800 கோடி டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.