2022 பிரிக்ஸ் நாடுகளின் விளையாட்டுப் போட்டி துவக்கம்
2022-09-01 10:42:23

2022 பிரிக்ஸ் நாடுகளின் விளையாட்டுப் போட்டி செப்டம்பர் முதல் நாள் துவங்கியது. கரோனா தொற்று காரணமாக இவ்வாண்டு சீனா, தென்னாப்பிரிக்கா, பிரேசில், ரஷியா, இந்தியா ஆகிய 5 பிரிக்ஸ் நாடுகளின் விளையாட்டு வீர்ர்கள் இணையம் மூலம் இதில் கலந்து கொள்கின்றனர்.

ஒரு திங்கள் நீடிக்கும் இப்போட்டி பிரேக் டான்ஸ், சதுரங்கம், வூசூ எனும் தற்காப்புக் கலை ஆகிய 3 பிரிவுகளில் நடைபெறுகிறது. இவற்றில் சதுரங்க ஆட்டத்தில் பல்வேறு அணிகளைச் சேர்ந்த வீரர்கள் இணையம் மூலம் போட்டியிடுகின்றனர். பார்வையாளர்கள் www.2022bricsgames.com இணைய முகவரியைப் பயன்படுத்தி ஆட்டங்களைக் கண்டுரசிக்கலாம். மேலும், பிரேக் டான்ஸ் மற்றும் வூசூ பிரிவுகளில் பொது மக்களும் சொந்த காணொலிப் பதிவுகளைப் பதிவேற்றலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் டிராகன் படகு, யோகா உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுக்களும் நடைபெறுகின்றன.

பிரிக்ஸ் நாடுகளின் விளையாட்டுப் போட்டி 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது ஆண்டுக்கு ஒரு முறை முறையே 5 பிரிக்ஸ் நாடுகளில் நடத்தப்படுகின்றது.