இலங்கை கடன் பிரச்சினை குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் நிலைப்பாடு
2022-09-02 18:50:48

செப்டம்பர் 2ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இலங்கை கடன் தொடர்பான கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ட்செள லீ ஜியன் பதில் அளிக்கையில், இலங்கை எதிர்கொண்டுள்ள இன்னல்களிலும் அறைகூவல்களிலும் சீனத் தரப்பு எப்போதும் நெருக்கமாக கவனம் செலுத்தி வருகின்றது. அதே வேளையில், சீனா இயன்ற அளவில் அந்நாட்டின் சமூக மற்றும் பொருளாதர வளர்ச்சிக்கு உதவி அளித்து வருகின்றது. தொடர்புடைய நிதி நிறுவனங்கள் இலங்கை தரப்புடன் உரிய தீர்வு காண்பதைச் சீனா ஆதரிக்கிறது. தவிரவும், தொடர்புடைய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து, இலங்கையின் தொடரவல்ல வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வ பங்காற்ற சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.