ஜனநாயகம் என்ற பெயரில் ஈராக்கைச் சீர்குலைத்த அமெரிக்கா
2022-09-02 10:45:46

கடந்த ஆண்டு ஆகஸ்டு 29ஆம் நாள், அமெரிக்கப் படை ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக வெளியேறுவதற்கு முன்பு, தீவிரவாதிகளைத் தாக்குவதைச் சாக்குபோக்காகச் சொல்லி நடத்திய வான் தாக்குதலில் 7 குழந்தைகள் உள்ளிட்ட 10 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

ஓராண்டுக்குப் பிறகு அதே நாள், ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் ஏற்பட்ட கடுமையான மோதலில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டனர்.

2003ஆம் ஆண்டில், சலவைத்தூள் நிறைந்த ஒரு சிறிய பாட்டிலைக் காட்டி, அமெரிக்கா ஈராக் போர் தொடுத்தது. இப்போருக்குப் பிறகு, ஈராக்கில் "அமெரிக்க ஜனநாயகத்தை" அமெரிக்கா வலுக்கட்டாயமாக பரப்புரை செய்தது. ஏறக்குறைய 20 ஆண்டுகளின் மூலம், கூறப்படும் "ஜனநாயக மாற்றத்துக்குப் பின்" ஈராக் பேரழிவு நிலையில் சிக்கிக் கொண்டுள்ளது.

ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்த நோக்கம், ஈராகிற்கு ஜனநாயகத்தைக் கொண்டு வருவது அல்ல. மாறாக, மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்காவின் ஆணை உரிமையை வலுப்படுத்துவதாகும் என்று நெடுநோக்குப் பிரச்சினை பற்றிய ஈராக் நிபுணர் அஹ்மத் அல்-ஷரிஃபி கூறினார்.