அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சி பற்றிய பொருளியலாளர்களின் கருத்து
2022-09-02 15:24:02

அமெரிக்கப் பொருளாதாரம் இன்னல்கள் மிக்க நிலமையில் உள்ளது என்று பொருளியலாளர்கள் பலர் அண்மையில் தெரிவித்தனர்.

யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயர்நிலை ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் எஸ்.ரோச் கூறுகையில், 2024ஆம் ஆண்டு வரை அமெரிக்கப் பொருளாதாரம் கடும் விழ்ச்சியடையும் வாய்ப்புண்டு என்றார். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொருளியல் பேராசிரியர் ஸ்டீவ் எச். ஹான்கே கூறுகையில், அமெரிக்காவிலுள்ள தற்போதைய கடும் பண வீக்கம் 2023 அல்லது 2024ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என்று தெரிவித்தார்.

மேலும், அடிப்படை வட்டி விகிதம் தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டு, அடுத்த ஆண்டிலும் உயர் நிலையில் இருக்கும் என்று அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தவிரவும், பல நாடுகளின் நிபுணர்கள் தெரிவிக்கையில், அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சி, உலகப் பொருளாதார மீட்சியைப் பாதித்து, வளரும் நாடுகள் மற்றும் புதிதாக வளரும் நாடுகளுக்குக் கடும் அறைக்கூவலாக அமையும் என்று தெரிவித்துள்ளனர்.