இந்தியாவின் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு
2022-09-02 11:15:30

இந்தியாவில் வேலையின்மை விகிதம் ஜுலை திங்களில் இருந்த 6.8 விழுக்காட்டிலிருந்து ஆகஸ்ட் திங்களில் 8.3 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம் வியாழக்கிழமை வெளியிட்ட தரவு இதைக் காட்டுகின்றது.

விதைப்புப் பருவத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிகழ்ந்த மழைப்பொழிவு, இதற்கான முக்கிய காரணமாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

தரவுகளின்படி, ஆகஸ்ட் திங்களில் நாடளவில் வேலையில் ஈடுபடும் மக்கள் தொகை 39 கோடியே 70 லட்சத்திலிருந்து 39 கோடியே 46 லட்சமாகக் குறைந்துள்ளது.