அர்ஜென்டீனாவில் காரணம் தெரியாத நுரையீரல் அழற்சி
2022-09-02 17:11:26

அர்ஜென்டீனாவின் வட மேற்குப் பகுதியிலுள்ள டுகுமான் மாநிலத்தில் காரணம் தெரியாத சில நுரையீரல் அழற்சி பாதிப்புகள் ஏற்பட்டதால், 3 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சகம் செப்டம்பர் 1ஆம் நாள் அறிவித்தது.

இந்தப் பாதிப்புகள் எல்லாம் இம்மாநிலத்திலுள்ள ஒரு மருத்துவமனையிலேயே ஏற்பட்டன. பாதிக்கப்பட்டவர்களில் பலர் இம்மருத்துவமனையின் பணியாளர்கள் ஆவர்.

 சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், கோவிட்-19, ஏ மற்றும் பீ ரக வைரஸ் காய்ச்சல் மற்றும் பல சாதாரண தொற்று நோய்கள் ஆகியவற்றால் பாதிப்பை ஏற்படுத்த சாத்தியம் தவிர்க்கப்பட்டுள்ளது.