பிரிகஸ் நாடுகளுக்கிடையில் சேவை வர்த்தகத்துக்கான ஒத்துழைப்பு
2022-09-03 16:25:48

கடந்த சில ஆண்டுகளில், சீனாவுக்கும் பிரிக்ஸ் நாடுகளுக்குமிடையிலான சேவைத் துறை வர்த்தகம் பெருமளவில் அதிகரித்து வருகிறது. 2022ஆம் ஆண்டு சேவை வர்த்தகத்துக்கான சீனச் சர்வதேசப் பொருட்காட்சியின் போது, பிரிக்ஸ் நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்கள் கூறுகையில், சேவை வர்த்தகத் துறையில் எண்ணியல் தொழில் நுட்பத்தின் பயன்பாடு தற்கால ஓட்டத்தின் போக்காகும். பிரிக்ஸ் நாடுகளுக்கிடையிலான சேவை வர்த்தக ஒத்துழைப்புக்கு பெரும் உள்ளார்ந்த ஆற்றல் உண்டு என்று தெரிவித்தனர்.

சீன வணிக அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2021ஆம் ஆண்டு சீன சேவைத் துறையின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொகை முதல்முறையாக 80 ஆயிரம் கோடி டாலரைத் தாண்டி, வரலாற்றில் புதிய சாதனையை எட்டியது. பிரிக்ஸ் நாடுகளுடனான சேவை வர்த்தகத் தொகை 2020ஆம் ஆண்டில் இருந்ததை விட 52 விழுக்காடு அதிகம்.

இந்திய வணிக மற்றும் தொழில் துறையின் அதிகாரி அமித் யாதவ் கூறுகையில், சேவை வர்த்தக ஒத்துழைப்பு உலகமயமாக்கப் போக்கை முன்னேற்றும். எண்ணியல் துறையில், பிரிக்ஸ் நாடுகள் அமைப்புமுறைக்கான ஒத்துழைப்பை முன்னேற்றி, பல்வேறு நாடுகளுக்கிடையில் தொடர்புக்குத் துணை புரிய வேண்டும் என்றார்.