இலங்கைக்குத் திரும்பிய முன்னாள் அரசுத் தலைவர் கோத்தபாய ராஜபக்சே
2022-09-03 18:26:20

இலங்கை அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் ஜுலை 13ஆம் நாள் நாட்டை விட்டுச் சென்ற முன்னாள் அரசுத் தலைவர் கோத்தபாய ராஜபக்சே வெள்ளிக்கிழமை இரவு இலங்கைக்குத் திரும்பியதாக உள்ளூர் ஊடகம் தகவல் வெளியிட்டது.

அதிகப் பாதுகாப்புப் பணியாளர்களின் துணையுடன், அவர் விமான நிலையத்தை அடைந்ததை உள்ளூர் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.

ஆளும் கட்சியான பொதுஜன பெரமுனாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிலர் அவரை வரவேற்றனர்.