தேசிய மக்கள் பேரவைக் கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டங்கள்
2022-09-03 17:14:34

13ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் 36ஆவது கூட்டம் செப்டம்பர் 2ஆம் நாள் பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் நிறைவுற்றது. தொலைத்தொடர்பு மற்றும் இணைய மோசடி எதிர்ப்பு சட்டம், புதிதாக திருத்தப்பட்ட வேளாண் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்புச் சட்டம் ஆகியவை இக்கூட்டத்தில் வாக்கெடுப்பு மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டித் தலைவர் லீ ட்சான்ஷு நிறைவுக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார்.

தொலைத்தொடர்பு மற்றும் இணைய மோசடி எதிர்ப்புச் சட்டத்தில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங்கின் முக்கிய உத்தரவுகள் செயல்படுத்தப்பட்டு, தொலைத்தொடர்பு மற்றும் இணைய மோசடியுடன் தொடர்புடைய பல்வேறு பகுதிகளுக்கும் தடுப்பு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. புதிதாகத் திருத்தப்பட்ட வேளாண் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்புச் சட்டம், மிகக் கண்டிப்பான வரையறை, கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் தண்டனை விதிப்புடன், பொது மக்களின் உடல் நலம் மற்றும் உயிர் பாதுகாப்பைப் பேணிக்காக்கும் என்று அவர் தெரிவித்தார்.