நேபாள நாடாளுமன்றத் தலைவரைச் சந்தித்த வாங் யாங்
2022-09-03 16:53:08

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டித் தலைவர்  வாங் யாங், 2ஆம் நாள் பெய்ஜிங்கில் காணொளி வழியாக, நேபாள நாடாளுமன்றத் தலைவர் கணேஷ் பிரசாத் திமில்சினாவைச் சந்தித்தார்.

சீனாவுக்கும் நேபாளத்திற்குமிடையிலான நட்புறவு நீண்டகாலமாக இருந்து வருகிறது. 2019ஆம் ஆண்டு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், நேபாளத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தை மேற்கொண்டார். இரு நாட்டுறவை, வளர்ச்சியையும் செழுமையையும் எதிர்நோக்கும் பல தலைமுறையும் நட்புறவிலான நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளியுறவாக உயர்த்த இரு நாட்டுத் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இரு நாட்டுத் தலைவர்கள் எட்டியுள்ள முக்கிய பொது கருத்துகளை நடைமுறைப்படுத்தி, நெடுநோக்கு பரிமாற்றத்தையும் நடைமுறை ஒத்துழைப்பையும் வலுப்படுத்த சீனா விரும்புகின்றது என்று வாங் யாங் தெரிவித்தார்.