சீன வெளியுறவு அமைச்சர்-சீனாவுக்கான ரஷிய தூதர் சந்திப்பு
2022-09-03 16:57:16

சீனாவிலிருந்து தாய்நாடு திரும்ப உள்ள ரஷிய தூதர் டெனிசோவ் சீன அரசவையின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீயை 2ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்தித்தார்.

சீனாவில் அவர் மேற்கொண்ட சிறந்த பணிகளை வாங் யீ உயர்வாகப் பாராட்டினார். அவர் கூறுகையில்,

நீங்கள் சீன பொது மக்களின் நண்பர். சீனாவில் பணி புரிந்த 10 ஆண்டுகளில், பல்வேறு துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பை முன்னேற்றுவதற்கும், இரு நாட்டு மக்களுக்கிடையிலான நட்புறவையும் நம்பிக்கையையும் முன்னேற்றுவதற்கும் முக்கியப் பங்காற்றியுள்ளீர்கள். சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் மற்றும் ரஷிய அரசுத் தலைவர் புதினின் வழிக்காட்டலில், இரு நாட்டு பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்பு இடைவிடாமல் முன்னேறி வருகின்றது. இதனை சீனா உயர்வாகப் பாராட்டுகின்றது என்றார்.