எதிரியுடனான வர்த்தகச் சட்டத்தை நீட்டிக்கும் அமெரிக்கா மீது கியூபா கண்டனம்
2022-09-04 16:23:09

கியூபா மீது 1962ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் எதிரியுடனான வர்த்தகச் சட்டத்தின் கால வரம்பை அமெரிக்க அரசு மீண்டும் நீட்டித்தது குறித்து, கியூபா அரசுத் தலைவர் மிகுவெல் டியாஸ் கேனல் 3ஆம் நாள் சுட்டுரையில் கண்டனம் தெரிவித்தார். இச்சட்டத்தை நீக்க பைடன் அரசுக்குத் துணிச்சல் இல்லாமல், இதனைச் சாக்குப்போக்காகக் கொண்டு கியூபா மீது தொடர்ந்து தடை போட்டு வருகிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், எதிரியுடனான வர்த்தகச் சட்டத்தைப் பயன்படுத்தி கியூபா அரசு மற்றும் மக்களுக்குத் துன்பம் தரும் 12ஆவது அமெரிக்க அரசுத் தலைவர் பைடன் ஆவார். அமெரிக்காவின் இச்செயல் சர்வதேசச் சமூகத்தில் பொது எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்று கியூபா வெளியுறவு அமைச்சர் புருனொ ரோட்ரிக்ஸ் 2ஆம் நாள் சுட்டுரையில் தெரிவித்தார்.