அறிவியல் தொழில் நுட்பம் நிறைந்த 2022 சேவை வர்த்தக பொருட்காட்சி
2022-09-04 16:27:22

செப்டம்பர் 4ஆம் நாள், 2022 சீன சர்வதேச சேவை வர்த்தகப் பொருட்காட்சியின் 4ஆவது தினமாகும். இதில் நுண்ணறிவு அறிவியல் தொழில் நுட்பம் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. சேவை வர்த்தக முன்னேற்றத்தை விரைவுபடுத்தும் நுண்ணறிவும் எண்ணியல் தொழில் நுட்பமும், உலக சேவை வர்த்தகத்திற்கு புதிய சக்தியை ஊட்டியுள்ளது.

இவ்வாண்டு சேவை வர்த்தகப் பொருட்காட்சியில், செயற்கை நுண்ணறிவு, மெட்டாவெர்ஸ், வி ஆர் சாதனம், 5ஜி பயன்பாடு உள்ளிட்ட பல உயர் அறிவியல் தொழில் நுட்ப சாதனங்கள்  காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒரு ஓட்டுநர் பள்ளி, வி ஆர் ஓட்டுநர் பயிற்சி சேவையுடன் இப்பொருட்காட்சியில் பங்கெடுத்துள்ளது.