எல்லையில் 50 உயிரியல் ஆய்வகங்கள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளன:ரஷியா
2022-09-04 17:26:09

உக்ரைன் பணியாளர்கள் வழங்கிய தகவலின்படி, ஜாபோரிஜியா அணு மின் நிலையம் அதன் கடைசி முதன்மை மின்சாரக் கம்பியுடன் மீண்டும் இணைப்பை இழந்தது. தற்போது காப்பு கம்பி ஒன்றின் மூலம் வெளிப்புற மின் தொகுதிக்கு மின்சாரம் வழங்குகிறது என்று சர்வதேச அணு ஆற்றல் நிறுவனம் 3ஆம் நாள் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. இந்த நிலையத்தின் இதர 3 முதன்மை மின் இணைப்புகள் முன்னதாக நடைபெற்ற மோதலின் காரணமாக இணைப்பை இழந்தன.

மேலும், ரஷிய இராணுவத்தின் கதிர்வீச்சு, வேதியியல் மற்றும் உயிரி பாதுகாப்புப் படைப்பிரிவுத் தளபதியின் கூற்றை மேற்கோள்காட்டி டாஸ் செய்தி நிறுவனம் 3ஆம் நாள் வெளியிட்ட செய்தியில், ரஷியாவின் எல்லைப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட உயிரியல் ஆய்வகங்கள் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் நிதியுதவியை ஏற்றுக் கொண்டு அதன் கட்டுப்பாட்டில் நவீனமயமாக்கச் சீர்திருத்தத்தை மேற்கொண்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.