அமெரிக்க-தென் கொரிய இராணுவப் பயிற்சிக்கு வட கொரியா கண்டனம்
2022-09-05 17:13:54

தென் கொரியா மற்றும் அமெரிக்கா இடையே “உல்ச்சி சுதந்திர கேடயம்” என்ற தலைப்பில் நடப்பு ஆண்டின் பிற்பாதிக்கான கூட்டு இராணுவப் பயிற்சி ஆகஸ்ட் 22ஆம் நாள் முதல் செப்டம்பர் முதல் நாள் வரை நடைபெற்றது. இது குறித்து வட கொரியாவின் சர்வதேச அரசியல் ஆய்வுக் கழகம் செப்டம்பர் 4ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில், இந்த இராணுவப் பயிற்சியானது, கொரிய தீபகற்கத்தின் நிலைமை தொடர்ந்து பதற்ற நிலையில் இருக்கச் செய்து, அணு ஆயுதப் போரின் விளிம்பை நோக்கிக் கொண்டு செல்லும் ஆபத்தான செயலாகும். தேசிய இணக்கம், ஒற்றுமை மற்றும் கொரிய தீபகற்பத்தின் அமைதியை வட மற்றும் தென் கொரியா நனவாக்குவதற்கான தடையாகவும் இது உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.